மாநில செய்திகள்

சிறந்த மின் நிறுவனங்கள் பட்டியல்: 39வது இடம் பிடித்த தமிழக மின்வாரியம் + "||" + List of best power companies: 39th place Tamil Nadu Electricity Board

சிறந்த மின் நிறுவனங்கள் பட்டியல்: 39வது இடம் பிடித்த தமிழக மின்வாரியம்

சிறந்த மின் நிறுவனங்கள் பட்டியல்:  39வது இடம் பிடித்த தமிழக மின்வாரியம்
இந்தியாவின் சிறந்த மின் நிறுவனங்கள் பட்டியலில் தமிழக மின்வாரியம் 39வது இடம் பிடித்துள்ளது.


மதுரை,

இந்தியாவின் சிறந்த மின் நிறுவனங்கள் பட்டியலில் தமிழக மின்வாரியம் 39வது இடம் பிடித்து, கடைசி நிலையான சி நிலையில் இடம் பெற்றுள்ளது.  இதனை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு மின்வாரியம் செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

சென்னையை சேர்ந்த தர்மலிங்கம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு தமிழக உயர் அழுத்த மின் கம்பிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த உயர் அழுத்த மின் கம்பிகள் விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்.

எனவே, நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு உயர் அழுத்த மின் கம்பிகள் கொண்டுச்செல்லும் பாதை தொடர்பாக 17.12.2020-ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, மாற்று பாதையில் உயர் அழுத்த மின் கம்பியை கொண்டு செல்ல உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் தொழிற்சாலைகள் அமைப்பதற்கும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்குமான ஒரு சிறப்பு திட்டமாகும். தமிழக மின் வாரியமும், தமிழக தொழில் துறையும் இணைந்து செயல்பட்டால் தான் மனுவில் கூறப்பட்டுள்ளது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு இல்லாமல் தொழில்துறை வளர்ச்சி என்பது இருக்காது. மத்திய எரிசக்தி துறை அறிக்கையில் 41 மின் நிறுவனங்கள் பட்டியலில் தமிழக மின்வாரியம் 39-வது இடத்தில் உள்ளது. தமிழக மின்வாரியம் கடைசி நிலையான சி நிலையில் இடம் பெற்றுள்ளது. இந்த அறிக்கையை மின்வாரியம் எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

எனவே, தமிழக மின்வாரியம் மோசமான நிலையிலிருந்து மேம்பட சில தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே மனுதாரர் கோரிக்கை தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனுதாரர் மின்வாரியம் மற்றும் தொழில்துறையை அணுகி உரிய நிவாரணம் பெறலாம். மனு முடிக்கப்படுகிறது என நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. லால்குடி, முசிறி நகராட்சிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்
லால்குடி, முசிறி நகராட்சிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்
2. ஆண்களைவிட பெண்கள் அதிகம்: தமிழகத்தில் 6 கோடியே 29 லட்சம் வாக்காளர்கள்
தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி, 6.29 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும், இதில் ஆண்களைவிட பெண்களே அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.
3. சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை மாவட்டத்தில் 40 லட்சத்து 54 ஆயிரத்து 38 வாக்காளர்கள் உள்ளனர்.
4. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
9 மாவட்டங்களில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.