தேசிய செய்திகள்

பெகாசஸ் உளவு விவகாரம்: மேற்கு வங்காளத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு அமைப்பு + "||" + Pegasus spy case: Retired panel of judges in West Bengal

பெகாசஸ் உளவு விவகாரம்: மேற்கு வங்காளத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு அமைப்பு

பெகாசஸ் உளவு விவகாரம்:  மேற்கு வங்காளத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு அமைப்பு
பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட ஒரு குழுவை மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அமைத்துள்ளார்.

கொல்கத்தா,

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் என்னும் உளவுமென்பொருளை பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட 300 முக்கிய பிரமுகர்களின் செல்போன்களை ஒட்டு கேட்க இலக்கு வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுதிரண்டு போர்க்கோலம் பூண்டு வருகின்றன.  ஆதாரம் இல்லாதவை என கூறி, ஒட்டு கேட்பு புகார்களை மத்திய அரசும், பா.ஜ.க.வும் மறுத்து வருகின்றன.  ஆனாலும் நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கி உள்ளன.

இந்நிலையில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மாநிலத்தில் பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதிகள் எம்.வி. லோகூர் மற்றும் ஜோதிர்மாய் பட்டச்சாரியா ஆகியோர் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. நாகலாந்து அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு
நாகலாந்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி விசாரணை நடத்த அரசு சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து உள்ளது.
2. சென்னை போலீசார் சார்பில் 13 பேரிடர் மீட்பு குழுக்கள் அமைப்பு
மழைவெள்ள மீட்பு நடவடிக்கையில் ஈடுபட சென்னை போலீசார் சார்பில் 13 பேரிடர் மீட்பு குழுக்கள் அமைப்பு.
3. பெகாசஸ் உளவு விவகாரம்: சிறப்பு விசாரணை குழு அமைக்க பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு
பெகாசஸ் விவகாரத்தை சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
4. பெகாசஸ் உளவு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் வரும் 5-ந்தேதி விசாரணை
பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை வரும் 5-ந்தேதி நடைபெற உள்ளது.
5. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்
பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆகஸ்ட் முதல்வாரத்தில் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.