உலக செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆட்சியை பிடித்தது இம்ரான்கான் கட்சி.. + "||" + Imran Khan's party wins Pakistan-occupied Kashmir elections

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆட்சியை பிடித்தது இம்ரான்கான் கட்சி..

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆட்சியை பிடித்தது இம்ரான்கான் கட்சி..
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தேர்தலில் இம்ரான்கான் கட்சி வெற்றி பெற்றது.
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களை கொண்ட சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 53 இடங்களில் 8 இடங்கள் நியமன உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சூழலில், மீதமுள்ள 45 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. கடுமையான வன்முறைகள் மற்றும் மோசடி புகார்களுக்கு மத்தியில் இந்த தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலின் போது நடந்த வன்முறையில் 2 பேர் பலியாகினர். போலீசார் உள்பட பலர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 23 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. 

இந்த கட்சி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆட்சியை பிடித்து இருப்பது இதுவே முதல் முறை ஆகும். இந்த தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி 10 இடங்களை கைப்பற்றி 2-வது இடத்தை பிடித்தது. அதேசமயம் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை வென்றது மறக்கமுடியாதது: ஷாஹீன் அப்ரிடி
கே.எல்.ராகுலுக்கு பந்து வீசியபோது, அது சிறந்த பந்தாக இருக்கும் என்று நான் கூட எதிர்பார்க்கவில்லை.
2. பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக பெண் நீதிபதியாக பதவியேற்றார் ஆயிஷா மாலிக்!
பாகிஸ்தான் நாட்டின் சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதியாக பதவியேற்றார் ஆயிஷா மாலிக்.
3. காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பறந்து வந்த பலூன்
ல்லை தாண்டும் அத்துமீறலில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் பாகிஸ்தான், இதுபோன்று தங்கள் நாட்டு கொடியுடன் இந்திய பகுதிக்குள் பலூன்களை அனுப்புவது வழக்கமாக உள்ளது
4. பாகிஸ்தானில் மோர்டார் குண்டுகள் வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள முகாம் ஒன்றில் பழைய மோர்டார் ரக குண்டுகள் திடீரென வெடித்து சிதறியது.
5. பாகிஸ்தான்: நபிகள் குறித்து அவதூறு பரப்பிய பெண்ணுக்கு மரண தண்டனை
பாகிஸ்தானில் தனது தோழிக்கு நபிகள் பற்றிய அவதூறான கேலிச்சித்திரங்களை அனுப்பிய பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.