மாநில செய்திகள்

பொய் வழக்குகளால் அ.தி.மு.க.வினரை அசைக்க கூட முடியாது - முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் + "||" + The AIADMK cannot be shaken by false allegations - Former Minister Natham Viswanathan

பொய் வழக்குகளால் அ.தி.மு.க.வினரை அசைக்க கூட முடியாது - முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்

பொய் வழக்குகளால் அ.தி.மு.க.வினரை அசைக்க கூட முடியாது - முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்
பொய் வழக்குகளால் அ.தி.மு.க.வினரை அசைக்க கூட முடியாது என முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறினார்.
திண்டுக்கல்,

தமிழகம் முழுவதும் நாளை (புதன்கிழமை) அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடக்கிறது. இதையொட்டி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம், திண்டுக்கல்லில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:- 

பொய் வழக்குகளை பதிவு செய்து அ.தி.மு.க.வினரை அசைத்து கூட பார்க்க முடியாது. எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வை ஆலமரம் போன்று ஜெயலலிதா வளர்த்துள்ளார். 

அ.தி.மு.க. என்பது உண்மை விசுவாசிகளை கொண்ட இயக்கம். எனவே, ஜெயலலிதா வாக்கை உணர்த்தும் வகையில் இன்னும் 100 ஆண்டுகளுக்கு மக்களின் இயக்கமாக திகழும். நாளை நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள்- பார்களை உடனடியாக மூட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின்பு மற்றொரு நிலைப்பாடு என்று தி.மு.க. செயல்படுகிறது என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
2. சசிகலாவும் நானும் வெவ்வேறு பாதை...அ.தி.மு.க.-வை மீட்பதே இருவரின் இலக்கு-டிடிவி தினகரன்
ஜனநாயக முறைப்படி அமமுக வெற்றி பெற்று அதிமுகவைக் கைப்பற்றும் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
3. அ.தி.மு.க.வை மீட்கும் நாள் தான் நமக்கெல்லாம் நிஜமான தீபாவளி - சசிகலா சபதம்
தன்னை சந்திக்கும் ஆதரவாளர்களிடம் அ.தி.மு.க பொதுச்செயலாளர் நான் தான் என கூறி அவர்களை சசிகலா உற்சாகப்படுத்தி வருகிறார்.
4. சோதனை என்பது அ.தி.மு.க.வுக்கு புதிதல்ல - முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
சோதனை என்பது அ.தி.மு.க.வுக்கு புதிதல்ல என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.
5. ஜெயலலிதாவின் பிரசார வாகனத்தில் பயணம் ; தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சசிகலா
சசிகலா இன்று பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். வழிநெடுக ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.