மாநில செய்திகள்

தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவச தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்கப்படும் - டாக்டர் ராதாகிருஷ்ணன் பேட்டி + "||" + Free vaccination in private hospitals will start soon - Interview with Dr. Radhakrishnan

தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவச தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்கப்படும் - டாக்டர் ராதாகிருஷ்ணன் பேட்டி

தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவச தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்கப்படும் - டாக்டர் ராதாகிருஷ்ணன் பேட்டி
தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவச தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை, 

இது குறித்து சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- 

தமிழகத்தில் இதுவரை 2.08 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி 11 லட்சத்து 36 ஆயிரம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. வரும் வாரத்தில் கூடுதலாக 10 லட்சம் தடுப்பூசி மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தனியார் ஆஸ்பத்திரிகளின் தடுப்பூசி ஒதுக்கீட்டை முழுமையாக பயன்படுத்தும் நோக்கத்துடன், அதில் இலவசமாக ஏழைகளுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் இதுவரை தனியார் ஆஸ்பத்திரிகள் மூலம் 14 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சி.எஸ்.ஆர். நிதி மூலம் தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவச தடுப்பூசி திட்டம் விரைவில் தொடங்க இருக்கிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.