தேசிய செய்திகள்

பா.ஜனதா மேலிட பார்வையாளர்கள் இன்று கர்நாடகம் வருகை + "||" + BJP top visitors visit Karnataka today

பா.ஜனதா மேலிட பார்வையாளர்கள் இன்று கர்நாடகம் வருகை

பா.ஜனதா மேலிட பார்வையாளர்கள் இன்று கர்நாடகம் வருகை
பா.ஜனதா மேலிட பார்வையாளர்கள் இன்று கர்நாடகம் வருகை தருகின்றனர்.
பெங்களூரு, 

கர்நாடக முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா நேற்று ராஜினாமா செய்தார். அரசின் 2 ஆண்டுகள் சாதனை விழா மேடையிலேயே கண்ணீர் சிந்தியபடி இதனை அவர் அறிவித்தார். பின்னர் எடியூரப்பா, கவர்னர் கெலாட்டை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இந்நிலையில், முதல்-மந்திரி எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்ததையடுத்து புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பது குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். இதுகுறித்து எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளை அறிய பா.ஜனதா மேலிட பார்வையாளர்களாக மேலிட பொறுப்பாளர் அருண்சிங், மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் இன்று (செவ்வாய்க்கிழமை) கர்நாடகம் வருகிறார்கள்.

அவர்கள் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை நடத்தி யாரை அடுத்த முதல்-மந்திரியாக தேர்ந்து எடுக்கலாம் என்பது குறித்து கருத்துகளை கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் முழுவதும் 600 மையங்களில் இன்று பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்...!
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
2. மராட்டியத்தில் இன்று 43,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று 43,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில திட்டக்குழுவின் ஆய்வுக் கூட்டம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில திட்டக்குழுவின் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
4. இந்தியாவில் தொடர்ந்து உயரும் தினசரி கொரோனா பாதிப்பு - இன்று 2.71 லட்சம் பேருக்கு தொற்று உறுதி...!
இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 2.68 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.
5. சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மகரஜோதி தரிசனம்…!
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.