தேசிய செய்திகள்

உருமாறும் கொரோனாவால் 3வது பூஸ்டர் டோஸ் தேவையா? டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் பேட்டி + "||" + Need a 3rd booster dose with a transforming corona? Delhi Aiims Director

உருமாறும் கொரோனாவால் 3வது பூஸ்டர் டோஸ் தேவையா? டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் பேட்டி

உருமாறும் கொரோனாவால் 3வது பூஸ்டர் டோஸ் தேவையா? டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் பேட்டி
உருமாறும் கொரோனாவால் 3வது பூஸ்டர் டோஸ் அளிக்க வேண்டிய தேவை ஏற்பட கூடும் என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா 2வது அலை முதல் அலையை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது.  கடந்த சில வாரங்களாக பாதிப்புகள் குறைந்து மெல்ல கட்டுக்குள் வருகின்றன.

இந்த நிலையை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.  எனினும், தொடர்ந்து புதிது புதிதாக உருமாறிய கொரோனா தோன்றுவது அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.

இதனால், பிரிட்டன் போன்ற நாடுகள் பொதுமக்களுக்கு 3வது பூஸ்டர் டோஸ் அளிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன.  இந்நிலையில், கொரோனா பூஸ்டர் டோஸ் பற்றி டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறுகையில், பொதுமக்கள் மத்தியில் நோயெதிர்ப்பு சக்தி குறையும்போது, பூஸ்டர் டோஸ் நமக்கு தேவை.

உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறையும் போது அதனை, பூஸ்டர் டோஸ் மூலம் ஈடு செய்து கொள்ளலாம்.  நாட்டிலுள்ள அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின், பூஸ்டர் டோஸ் போடும் பணி தொடங்கப்படும்.  இந்த ஆண்டு இறுதிக்குள் பூஸ்டர் டோஸ் போடும் பணிகள் தொடங்கும் வாய்ப்புகள் அதிகம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சாய்னா நேவால் குறித்து அவதூறு பேச்சு; நடிகர் சித்தார்த்துக்கு சம்மன்
சாய்னா நேவால் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான புகாரில் நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என சென்னை மாநகர காவல் ஆணையர் கூறியுள்ளார்.
2. கொரோனாவுடன் வாழ மக்கள் கற்று கொள்ள வேண்டும்; தொற்று நோய் நிபுணர் பேட்டி
கொரோனாவுடன் வாழ மக்கள் கற்று கொள்ள வேண்டும் என பிரபல தொற்று நோய் நிபுணர் பேட்டியில் கூறியுள்ளார்.
3. நான் வென்றதிலேயே பெரிய உலக சுற்றுலா போட்டி இது; லக்சயா சென் பேட்டி
நான் வென்றதிலேயே பெரிய உலக சுற்றுலா போட்டி இது என சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீரர் லக்சயா சென் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
4. மூத்த குடிமகன்களுக்கு கொரோனா மருந்துகளை கொடுக்கலாம்; ஆனால்... டாக்டர் எச்சரிக்கை
பருவ வயதினருக்கு மோல்னுபிரவிர் என்ற கொரோனா மருந்துகளை கொடுக்க கூடாது என கொரோனா பணிக்குழு தலைவர் பேட்டியில் கூறியுள்ளார்.
5. 79% பாதிப்பு; கர்நாடகாவில் கொரோனா மையம் ஆக திகழும் பெங்களூரு நகர்
கர்நாடகாவில் 79% பாதிப்புகளுடன் கொரோனாவின் மையம் ஆக பெங்களூரு நகர் உள்ளது.