பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி; துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடி ஸ்டேஜ் 2க்கு தகுதி + "||" + Tokyo Olympics; Indian pair qualifies for Stage 2 in Sniper

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி; துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடி ஸ்டேஜ் 2க்கு தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி; துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடி ஸ்டேஜ் 2க்கு தகுதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மானு பாக்கர் மற்றும் சவுரப் சவுத்ரி இணை ஸ்டேஜ் 2க்கு தகுதி பெற்றுள்ளது.


டோக்கியோ,


டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவுக்கான தகுதி சுற்று போட்டி இன்று அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.

இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் போட்டி ஒன்றில் இந்தியாவின் மானு பாக்கர் மற்றும் சவுரப் சவுத்ரி இணை வெற்றி பெற்று ஸ்டேஜ் 2க்கு தகுதி பெற்றுள்ளது.

எனினும், மற்றொரு இந்திய ஜோடியான யஷாஸ்வினி தேஸ்வால் மற்றும் அபிசேக் வர்மா இணை தோல்வியடைந்து வெளியேறி உள்ளது.  இந்த போட்டிக்கான இறுதி சுற்று காலை 8.07 மணிக்கு நடைபெற உள்ளது.

இதேபோன்று, இந்தியா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையேயான ஆக்கி ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம் ஒன்று இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
தொடர்புடைய செய்திகள்

1. டோக்கியோ பாராஒலிம்பிக் வில்வித்தையில் ராகேஷ் குமார் காலிறுதிக்கு தகுதி
டோக்கியோ பாராஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ராகேஷ் குமார் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
2. டோக்கியோ பாராஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை இறுதி போட்டிக்கு தகுதி
டோக்கியோ பாராஒலிம்பிக் மகளிர் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
3. டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகள்: இந்தியாவின் பவீனா பட்டேல் காலிறுதிக்கு தகுதி
டோக்கியோ பாராஒலிம்பிக்கின் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவீனா பட்டேல் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
4. கஷ்ட காலத்தில் உதவிய 150 லாரி டிரைவர்களுக்கு விருந்து ; மனிதே நேய மங்கை மீராபாய் சானு
பளுதூக்குதல்தான் தன்னுடைய எதிர்காலம் என மீரா பாய் சானு முடிவு செய்தாலும் பயிற்சியை விட அதற்காக அவர் மேற்கொள்ளும் பயணம் மிகவும் சிரமத்தை கொடுத்துள்ளது.
5. ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோ நகரில் மர்ம நபர் தாக்குதல்;மாணவி உள்பட 10 பேர் காயம்
ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் டோக்கியோ நகரில் ரெயிலில் பயணித்த மர்ம நபர் கத்தியால் தாக்கியதில் 10 பேர் காயமடைந்தனர்.