மாநில செய்திகள்

தொண்டர்கள், தலைவர்கள் சால்வை, மாலை கொண்டு வர வேண்டாம்; பா.ஜ.க. தலைவர் கடிதம் + "||" + Volunteers, leaders do not bring shawls, garlands; BJP Chairman's letter

தொண்டர்கள், தலைவர்கள் சால்வை, மாலை கொண்டு வர வேண்டாம்; பா.ஜ.க. தலைவர் கடிதம்

தொண்டர்கள், தலைவர்கள் சால்வை, மாலை கொண்டு வர வேண்டாம்; பா.ஜ.க. தலைவர் கடிதம்
என்னை சந்திக்க வரும் தொண்டர்கள், தலைவர்கள் சால்வை, மாலை உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டாம் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவரது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை, அக்கட்சி வெளியிட்டுள்ளது.  அதில், என்னை சந்திக்க வரும் போது பூங்கொத்து, மாலை, மலர் கிரீடம் போன்றவற்றை கொண்டு வருவதை தவிர்க்கும் படி அன்போடு வேண்டுகிறேன்.

அதற்கு பதிலாக, நமது கட்சியின் பத்திரிகையான, 'ஒரே நாடு' மாதமிருமுறை இதழுக்கு 3 ஆண்டுகளுக்கான சந்தா செலுத்துவது எனக்கு சால்வை, மாலை, கிரீடம் அணிவிப்பதை விட பெரும் மகிழ்ச்சி தரும்.

இதையே நான் பெரிதும் விரும்புகிறேன். நமது கட்சி இதழை ஆதரிப்பதன் மூலம் நமது சித்தாந்தம், நமது சாதனைகளை மக்களுக்கு கொண்டு செல்வோம். உங்கள் ஒத்துழைப்பை நல்க வேண்டுகிறேன் என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு கட்சிகளுக்கும், தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு பத்திரிகை உள்ளது. அதேபோல், பா.ஜ.க.வின் ஒரே நாடு என்ற பத்திரிகையை பெரிய அளவில் கட்டமைக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளார் என கட்சியினர் கூறுகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பியுஷ் கோயலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
2. தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் மத்திய மந்திரி அமித்ஷாவிற்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
வடகிழக்குப் பருவமழை வெள்ள சேத சீரமைப்புப் பணிகளுக்காக தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனே நிதி வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி அமித்ஷாவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
3. ‘நீட்' தேர்வு விலக்கு குறித்து விவாதிக்க இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
‘நீட்' தேர்வு விலக்கு குறித்து விவாதிக்க இன்று நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க கட்சி தலைவர்களுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பி உள்ளது.
4. இலங்கை சிறையில் இருக்கும் 56 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை சிறையில் இருந்து வரும் 56 தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
5. சென்னை வானிலை மைய செயல்பாட்டை மேம்படுத்த மந்திரி அமித்ஷாவுக்கு முதல்-அமைச்சர் கடிதம்
சென்னை வானிலை ஆய்வு மைய செயல்பாட்டை மேம்படுத்த உரிய நடவடிக்கை கோரி மத்திய உள்துறை மந்திரிக்கு, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.