தேசிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் மம்தா பானர்ஜி + "||" + PM Modi, 3 Congress Leaders - Mamata Banerjee's Day 1 Agenda In Delhi

டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் மம்தா பானர்ஜி

டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் மம்தா பானர்ஜி
5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அவர், இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேச உள்ளார்.
புதுடெல்லி,

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்குவங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். 

மேற்குவங்காள சட்டமன்ற தேர்தலில் 3-வது முறையாக வெற்றி பெற்று, முதல்-மந்திரியாக பதவி ஏற்ற அவர், டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியையும், ஜனாதிபதியையும் நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்தநிலையில் நேற்று மாநில மந்திரி சபை கூட்டம் முடிந்ததும், கொல்கத்தாவில் உள்ள போஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த மம்தா பானர்ஜி, விமானம் மூலம் டெல்லி சென்றார்.

5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அவர், இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேச உள்ளார். மாலை  4 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

முன்னதாக,  காங்கிரஸ் மூத்த தலைவரான கமல் நாத் மற்றும் ஆனந்த் சர்மா முறையே பிற்பகல் 2 மற்றும் 3 மணியளவில் அடுத்தடுத்து சந்திக்க உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், மம்தா பானர்ஜியின் டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி கடவுளின் அவதாரம்..!! - மத்திய பிரதேச மந்திரி கருத்து
காங்கிரசின் அராஜகங்களுக்கு முடிவு கட்ட பிறந்த கடவுளின் அவதாரம், மோடி என்று மத்திய பிரதேச மந்திரி தெரிவித்துள்ளார்.
2. டெலிபிராம்ப்டரால் கூட இவ்வளவு பொய்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை: மோடியை கலாய்த்த ராகுல் காந்தி
'டெலிப்ராம்ப்டரால் கூட இவ்வளவு பொய்களை ஏற்க முடியவில்லை' என பிரதமரின் உரையை ராகுல் காந்தி கிண்டலடிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
3. பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல்; உளவுத்துறை எச்சரிக்கை
குடியரசு தின விழாவில் பிரதமரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து டெல்லியில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
4. இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் - பிரதமர் மோடி
இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் என உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
5. பிரதமர் மோடியை கிண்டல் செய்து டிவி நசைச்சுவை நிகழ்ச்சி - தமிழக பா.ஜ.க கண்டனம்
பிரதமர் மோடியை கிண்டல் செய்து தனியார் டிவி நசைச்சுவை நிகழ்ச்சிக்கு தமிழக பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது.