தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 132 நாட்களில் இல்லாத அளவாக ஒருநாள் கொரோனா பாதிப்பு சரிவு + "||" + india reports 29,689 fresh COVID cases, 42,363 recoveries, and 415 deaths in the past 24 hours

இந்தியாவில் கடந்த 132 நாட்களில் இல்லாத அளவாக ஒருநாள் கொரோனா பாதிப்பு சரிவு

இந்தியாவில் கடந்த 132 நாட்களில் இல்லாத அளவாக ஒருநாள் கொரோனா பாதிப்பு சரிவு
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 1.73 சதவிகிதமாக உள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை  தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்பு இறங்கு முகத்திலேயே இருந்தது. எனினும், கேரளாவில் தொற்று பாதிப்பு விகிதம் அதிகரித்து காணப்பட்டதால், தினசரி பாதிப்பில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்கள் இருந்தன. 

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- “ கடந்த 24 மணி நேரத்தில் 29,689- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3,98,100- ஆக குறைந்துள்ளது. சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 124- நாட்களுக்குப் பிறகு 4 லட்சத்திற்கு கீழ் வந்துள்ளது. அதேபோல், தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 132- நாட்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 415-பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,21,382- ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. சரத்பாவருக்கு கொரோனா தொற்று..!
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பாவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கர்நாடகத்தில் 100 சதவீத முதல் டோஸ் தடுப்பூசி போட்டு சாதனை- மந்திரி சுதாகர் பேட்டி
மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
3. கர்நாடகாவை அதிரவைத்த கொரோனா..தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது
கர்நாடகாவில் கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 57 ஆயிரத்து796- ஆக உள்ளது.
4. தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு; போலீசார் தீவிர கண்காணிப்பு- சாலைகள் வெறிச்சோடின
ஊரடங்கு காரணமாக தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
5. அமெரிக்காவில் ஒரே நாளில் 3.12 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 3.12 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.