மாநில செய்திகள்

9 முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்-அமைச்சர் தகவல் + "||" + 9 to plus 2 Regarding the opening of schools We are consulting -Minister Information

9 முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்-அமைச்சர் தகவல்

9 முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்-அமைச்சர் தகவல்
சி.எஸ்.ஆர் சமூக பொறுப்பு நிதி மூலம் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என அமைச்சர் கூறினார்.
சென்னை

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது. இதனால் பொது முடக்கத்திலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து அரசு பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க ஆலோசனை நடத்தி வருவதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

 தமிழகத்தில் 9 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க ஆலோசனை நடத்தி வருகிறோம். 
பிற மாநிலங்களில் உள்ள நிலவரம் பற்றி முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்ற பின், உரிய முடிவு எடுக்கப்படும்.   இது குறித்த அறிவிப்பை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார்.

சி.எஸ்.ஆர் சமூக பொறுப்பு நிதி மூலம் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. 10, 12 வகுப்புகளுக்கு கட்டாயம் நேரடி பொதுத்தேர்வு- அமைச்சர் அன்பில் மகேஷ்
10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடிப் பொதுத்தேர்வு நடை பெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
2. ஒமைக்ரான் பரவல்: 6 முதல் 12க்கு தினசரி வகுப்பு நடத்துவதில் மாற்றமா? - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்
6 முதல் 12க்கு தினசரி வகுப்பு நடத்துவதில் மாற்றமா என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார்.
3. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உரையாடிய அமைச்சர்
திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரையாடினார்.
4. தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை சங்கடத்தை ஏற்படுத்துகிறது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
நோய்த்தொற்று காலத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை சங்கடத்தை ஏற்படுத்துகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
5. 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து 15-ந் தேதி அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து அரசிடம் 15-ந்தேதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்தார். திருச்சி திருெவறும்பூரில் நேற்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-