தேசிய செய்திகள்

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓபிஎஸ்-ஈபிஎஸ் சந்திப்பு + "||" + OPS EPS Meets union minister amitsha

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓபிஎஸ்-ஈபிஎஸ் சந்திப்பு

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓபிஎஸ்-ஈபிஎஸ் சந்திப்பு
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி சந்தித்தனர்.
புதுடெல்லி,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லி வந்தனர். இவர்களுடன் அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், பி.எச்.மனோஜ்பாண்டியன் ஆகியோரும் வந்தனர்.

பின்னர் இவர்கள் காலை 11 மணி அளவில் நாடாளுமன்ற வளாகம் சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தனர். அப்போது எம்.பி.க்கள் தம்பிதுரை, நவநீதகிருஷ்ணன், சந்திரசேகர், பி.ரவீந்திரநாத்குமார் ஆகியோரும் உடன் இருந்தனர். பின்பு ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சுமார் அரைமணிநேரம் பிரதமர் மோடியுடன் உரையாடினர். அப்போது பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி சந்தித்தனர்.சந்திப்பின் போது அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணியும் உடன் இருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. மக்களுக்கு நன்மை பயக்கும் முடிவுகள் மட்டுமே எடுக்கப்படுகிறது: மோடிக்கு அமித்ஷா பாராட்டு
கடந்த அரசுகள் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டே முடிவுகளை எடுத்தன என்று அமித்ஷா சாடினார்.
2. தவறு செய்தவர்கள் திருந்தினால், அதை தலைமை ஏற்றுக்கொள்ள வேண்டும்- ஓ.பி.எஸ். சொன்ன குட்டிக்கதை
சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற அதிமுக கிறிஸ்துமஸ் விழாவில் ஓ.பி.எஸ். சொன்ன குட்டிக்கதை பேசுபொருளாக மாறியுள்ளது.
3. மராட்டிய மாநிலத்தில் அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணம்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக நாளை மராட்டியம் செல்கிறார்.
4. நாட்டு மக்களின் நலனைத் தவிர பிரதமருக்கு வேறு சிந்தனையே இல்லை- அமித்ஷா புகழாரம்
பிரதமர் இந்த அறிவிப்பை ‘குரு புராப்’ தினத்தில் வழங்கியிருப்பதை கூடுதல் சிறப்பம்சம் கொண்டதாக உள்ளது என அமித்ஷா பாராட்டியுள்ளார்.
5. மோடி, அமித்ஷா பொதுக்கூட்டத்துக்கு ஆள் திரட்ட அரசுப்பணத்தை செலவழிப்பதா? - பிரியங்கா காந்தி கண்டனம்
மோடி, அமித்ஷா பொதுக்கூட்டத்துக்கு ஆள் திரட்ட அரசுப்பணத்தை செலவழிப்பதா என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.