தேசிய செய்திகள்

பெகாசஸ் செல்போன் உளவு விவகாரம் மாநிலங்களவை ஒத்திவைப்பு + "||" + Rajya Sabha adjourned as TMC members troop into well of House over Pegasus row

பெகாசஸ் செல்போன் உளவு விவகாரம் மாநிலங்களவை ஒத்திவைப்பு

பெகாசஸ் செல்போன் உளவு விவகாரம் மாநிலங்களவை ஒத்திவைப்பு
பெகாசஸ் செல்போன் உளவு விவகாரம் தொடர்பாக மாநிலங்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி

பெகாசஸ் செல்போன் உளவு விவகாரத்தை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கடட்சிகள் போராட்டம் நடத்தின. சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று அவை வலியுறுத்தின.

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் என்னும் உளவுமென்பொருளைப் பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பத்திரிகையாளர்கள், மத்திய மந்திரிகள் உள்ளிட்ட 300 முக்கிய பிரமுகர்களின் செல்போன்களை ஒட்டு கேட்க இலக்கு வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுதிரண்டு போர்க்கோலம் பூண்டு வருகின்றன.

ஒட்டு கேட்பு புகார்களை மத்திய அரசும் , பா.ஜ.க.வும் மறுத்து வருகின்றன. இது புனையப்பட்ட கதை, ஆதாரம் இல்லை என அவை கூறுகின்றன. ஆனாலும் நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கி உள்ளன.

எதிர்க்கட்சிகளின் சலசலப்புக்கு மத்தியில் இன்று  மாநிலங்களவை கூடியது பெகாசஸ் செல்போன் உளவு விவகாரத்தை  திரிணாமுல் காங்கிரஸ் எழுப்பியது. மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பதில் அளிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மக்களவையில் காங்கிரசின் துணைத் தலைவர் கவுரவ் கோகோய், அசாம்-மிசோரம் எல்லை மோதலைப் பற்றி விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளார்.

மக்களவையில் பெகாசஸ் செல்போன் உளவு விவகாரம்  குறித்து விவாதிக்க காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரி ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்ற கூட்டத்தொடர்: சோனியாகாந்தி ஆலோசனை
டெல்லியில் சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
2. பெகாசஸ் விவகாரம் : 14 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 18 எம்.பி.க்கள் கூட்டறிக்கை
பெகாசஸ் விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் விவாதிக்க 14 எதிர்க் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
3. மாநிலங்களவையில் அமளி:திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் இடைநீக்கம்
பெகாசஸ் விவகாரத்தை எழுப்பி மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
4. பா.ஜ.க.,ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் உறுதியாக நிற்க வேண்டும் -ராகுல் காந்தி
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ராகுல்காந்தி மற்றும் எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் பேரணியாக சென்றனர்.
5. நாடாளுமன்றத்தை அவமதிக்கும் எதிர்க்கட்சிகள் ; பிரதமர் மோடி குற்றச்சாட்டு
இன்று எதிர்க்கட்சிகளை சமாளிப்பது குறித்த பா.ஜ.க. எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.