தேசிய செய்திகள்

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை - சென்னை ஐகோர்ட் உத்தரவு + "||" + Chennai high-Court orders stay of actor Vijay's Rs 1 lakh fine

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை - சென்னை ஐகோர்ட் உத்தரவு

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை - சென்னை ஐகோர்ட் உத்தரவு
நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

கடந்த 2012ம் ஆண்டு பிரிட்டன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 'ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்' காருக்கு, நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை  ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த அபராத தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கும்படியும் தெரிவிக்கப்பட்டது. மேலும், வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு, நன்கொடை அல்ல, நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும், ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது எனவும் காட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில், தனி நீதிபதி விதித்த தீர்ப்பை எதிர்த்தும், தான் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை நீக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் விஜய் தரப்பில் மேல்முறையீடு  செய்யப்பட்டது. இந்த வழக்கில் விஜய் தரப்பில் இன்று முன்வைக்கப்பட்ட வாதத்தில், ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்தவேண்டும் என்கிற உத்தரவை எதிர்க்கவில்லை, அதை மதிக்கிறோம். ரோல்ஸ் ராய் காருக்கு நுழைவு வரி செலுத்த தயாராக இருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து  நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, நடிகர் விஜய்க்கு  ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்
நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார்.
2. ரவுடி சி.டி.மணியை குண்டர் சட்டத்தில் அடைத்த காவல் ஆணையரின் உத்தரவு ரத்து - சென்னை ஐகோர்ட்
ரவுடி சி.டி.மணியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த சென்னை மாநகர காவல் ஆணையரின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
3. 'பீஸ்ட்' படத்தின் ரிலீஸ் அப்டேட்..! ரசிகர்கள் உற்சாகம்..!
நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படத்தின் ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
4. அவசர... அவசரமாக... பீஸ்ட் படத்தின் டப்பிங்கை முடித்த விஜய்...!
நடிகர் விஜய் 'பீஸ்ட்' திரைப்படத்திற்கான டப்பிங் பணிகளை விரைவாக முடித்துவிட்டார்.
5. 22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரிலீசாகிறது 'துள்ளாத மனமும் துள்ளும்' திரைப்படம்..!
நடிகர் விஜய் மற்றும் நடிகை சிம்ரன் நடித்திருந்த 'துள்ளாத மனமும் துள்ளும்' திரைப்படம் 22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரிலீசாகிறது