தேசிய செய்திகள்

கர்நாடக புதிய முதல் மந்திரி யார்? இன்று மாலை 5 மணிக்கு பாஜக ஆலோசனை + "||" + Union Ministers G Kishan Reddy and Dharmendra Pradhan going to Karnataka as Observers. MLAs of Karnataka BJP likely to meet at 5 pm today.

கர்நாடக புதிய முதல் மந்திரி யார்? இன்று மாலை 5 மணிக்கு பாஜக ஆலோசனை

கர்நாடக புதிய முதல் மந்திரி யார்?  இன்று மாலை 5 மணிக்கு பாஜக ஆலோசனை
கர்நாடக முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா நேற்று ராஜினாமா செய்தார். அரசின் 2 ஆண்டுகள் சாதனை விழா மேடையிலேயே கண்ணீர் சிந்தியபடி இதனை அவர் அறிவித்தார்.
பெங்களூரு,

கர்நாடக முதல் மந்திரி பொறுப்பில் இருந்து எடியூரப்பா நேற்று பதவி விலகினார். எடியூரப்பா பதவி விலகியதால் அம்மாநிலத்தின் அடுத்த முதல் மந்திரியாக யார் பதவி ஏற்க உள்ளனர் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. 

 ஆளும் கட்சியான பாஜக இது தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்திற்காக பாஜக மேலிட  பொறுப்பாளர்களான மத்திய மந்திரி கிஷன் ரெட்டி மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோர் இன்று கர்நாடக வருகை தருகின்றனர்.

 பாஜக எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அடுத்த முதல் மந்திரி யார் என்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத்தெரிகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகா: பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனருக்கு கொரோனா
பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
2. கர்நாடகாவில் இன்று 48,905 பேருக்கு கொரோனா தொற்று....!
கர்நாடகாவில் இன்று மேலும் 48,905 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தடையை மீறி போராட்டம்: அண்ணாமலை உள்பட பா.ஜ.க.வினர் 200 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னையில் தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை உள்பட பா.ஜ.க.வினர் 200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
4. கொரோனா பாதிப்பு: கர்நாடகாவில் ஒரே நாளில் 52 பேர் உயிரிழப்பு
கர்நாடகத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
5. விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வாலிபரை அடித்துக்கொன்ற திருநங்கைகள்...!
திருநங்கைகள் வைத்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.