தேசிய செய்திகள்

இரட்டை சகோதரர்களை கடத்தி கொலை செய்த 3 குற்றவாளிகளுக்கு சாகும்வரை 4 ஆயுள் தண்டனை + "||" + 4 times life imprisonment till death to 3 for abducting, killing Satna twins

இரட்டை சகோதரர்களை கடத்தி கொலை செய்த 3 குற்றவாளிகளுக்கு சாகும்வரை 4 ஆயுள் தண்டனை

இரட்டை சகோதரர்களை கடத்தி கொலை செய்த 3 குற்றவாளிகளுக்கு சாகும்வரை 4 ஆயுள் தண்டனை
ஆறு வயது இரட்டைச் சகோதரர்களை பணத்துக்காகக் கடத்திக் கொன்ற ஐந்து பேருக்கு அடுத்தடுத்து அனுபவிக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சத்னா

மத்தியபிரப்பிரதேசத்தைச் சேர்ந்த எண்ணெய் வியாபாரி பிரிஜேஷ் ராவத்தின் இரட்டைக் குழந்தைகளான ஷிரேயான்ஷ், பிரியான்ஷ் ஆகியோர் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சித்ரகூட்டில் உள்ள பள்ளியிலிருந்து துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டனர்.

குழந்தைகளைக் கடத்திச் சென்ற கும்பல் ரூ.1 கோடி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். உடனடியாக குற்றவாளிகளுக்கு ரூ.20 லட்சம் கொடுத்த நிலையில், குழந்தைகளைக் கொலை செய்த குற்றவாளிகள், உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டா பகுதிக்கு அருகே யமுனா நதியில் உடல்களை வீசினர்.

இது தொடர்பாக போலீசார் உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் வசிக்கும் ராஜு என்ற ராகேஷ் திவேதி, லக்கி சிங் தோமர், ரோஹித் திவேதி மற்றும் ராம்கேஷ் யாதவ்,ஹமிர்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிண்டோ யாதவ் மற்றும் சித்ரகூட்டில் உள்ள நயாகானில் வசிக்கும் பத்ம் சுக்லா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.பிரதான குற்றவாளியான ராம்கேஷ் யாதவ் இரட்டையர்களின் ஆசிரியராக இருந்தார்.

ராம்கேஷ் யாதவ் 2019 மே மாதம் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

இரட்டை குழந்தைகள் கடத்தல் மற்றும் கொலை  தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இரட்டையர்கள் கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வந்த சத்னா நீதிமன்றம், குற்றவாளிகள் ஐந்து பேருக்கும்  ஆயுள் தண்டனை விதித்ததோடு, ஒரு ஆயுள் தண்டனை முடிந்ததும், அடுத்த ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட மூன்று குற்றவாளிகள்  பத்ம் சுக்லா ராஜு மற்றும் லக்கி  சிங் தோமர் ஆகிய  3 பேருக்கும் இரட்டை  குழந்தைகளை கடத்தி கொலை செய்ததற்காக மரணம் அடையும் வரை   நான்கு முறை ஆயுள் தண்டனையும், ரூ.1.7 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவர் கடத்தல், கிரிமினல் சதி மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ்  குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டு இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாக வழக்கு விசாரணைக்கு பொறுப்பான  ஹரி கிருஷ்ணா திரிபாதி தெரிவித்தார்.