கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வீரர் குருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா பாதிப்பு: 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு + "||" + COVID-positive case in Indian camp, 2nd T20I postponed

இந்திய கிரிக்கெட் வீரர் குருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா பாதிப்பு: 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு

இந்திய கிரிக்கெட் வீரர் குருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா பாதிப்பு: 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு
குருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு,

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த சூழலில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெற இருந்தது. 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரரும், ஆல்-ரவுண்டருமான குருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று நடக்கவிருந்த இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக வெளியான கிரிக்கெட் வட்டார தகவல்படி, “"குருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், இன்று( செவ்வாய்க்கிழமை) நடைபெறவிருந்த டி20 ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மற்ற வீரர்கள் அனைவருக்கும் நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால், 2-வது டி20 ஆட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறும். வீரர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.