உலக செய்திகள்

சீனாவில் படிப்படியாக உயரும் கொரோனா பாதிப்பு; புதிதாக 71 பேருக்கு தொற்று உறுதி + "||" + Corona infection Gradually rising in China 71 new cases confirmed

சீனாவில் படிப்படியாக உயரும் கொரோனா பாதிப்பு; புதிதாக 71 பேருக்கு தொற்று உறுதி

சீனாவில் படிப்படியாக உயரும் கொரோனா பாதிப்பு; புதிதாக 71 பேருக்கு தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
பீஜிங், 

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 76 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த ஆண்டு அதிகபட்சமாக கடந்த ஜனவரி 30 ஆம் தேதி 92 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தது. அதன் பின்னர் தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. அந்த வகையில் 20 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 92,676 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636  பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. 3 விண்வெளி வீரர்களை அடுத்த மாதம் விண்ணுக்கு அனுப்பும் சீனா
விண்வெளி ஆய்வு மையம் அமைக்கும் பணிக்காக, 3 விண்வெளி வீரர்களை அடுத்த மாதம் சீனா விண்ணுக்கு அனுப்ப உள்ளது.
2. கர்நாடகத்தில் இன்று 1,139 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
கர்நாடகாவில் தற்போது 15,383 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. கேரளாவில் இன்று 19,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் தற்போது 1,73,631 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. புதுச்சேரியில் புதிதாக 79 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 78 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
5. சீனாவில் புதிதாக 46 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்
சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.