தேசிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடி உடன் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சந்திப்பு + "||" + Mamata Banerjee Meets PM At His Residence

டெல்லியில் பிரதமர் மோடி உடன் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடி உடன் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சந்திப்பு
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திரமோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
புதுடெல்லி, 

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில், தற்போது பிரதமர் நரேந்திரமோடியை அவரது இல்லத்தில் மம்தா பானர்ஜி சந்தித்து பேசி வருகிறார். 

இந்த சந்திப்பில் பிரதமர் மோடியுடன் மாநிலத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்குவது மற்றும் மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், மேற்கு வங்கத்தின் நிதி நெருக்கடி சூழலை போக்கும் வண்ணம், மத்திய அரசு நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மம்தா பானர்ஜி முன்வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த சந்திப்பை தொடர்ந்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை நேரில் சந்திக்க உள்ளார். மேலும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் திரிணமூல் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாளை காலை மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்த உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2. டெல்லியில் இன்று 34 பேருக்கு கொரோனா; 25 பேர் டிஸ்சார்ஜ்
டெல்லியில் தற்போது 373 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3. இரண்டு நாள் பயணமாக பஞ்சாப் செல்கிறார் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாபிற்கு இரண்டு நாள் பயணம் செல்கிறார். அதன் பின்பு அவர் பெரிய அறிவிப்புகளை வெளியிடுவார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
4. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச்சு நடத்த வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச்சு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
5. போராடும் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; காங்கிரஸ் வலியுறுத்தல்
விவசாயிகளுடன் நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும், இல்லையெனில் நமது நாட்டின் எதிர்காலம் இருளில் மூழ்கும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.