தேசிய செய்திகள்

காலை முதல் கனமழை பெய்து வருகிறது ; டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை + "||" + Delhi goes on 'orange alert' due to flurry of rain

காலை முதல் கனமழை பெய்து வருகிறது ; டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

காலை முதல் கனமழை பெய்து வருகிறது ; டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
டெல்லியில் புதன்கிழமை முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது, மேலும் சனிக்கிழமை வரை லேசான மழை மற்றும் தூறல் மழை தொடரும் என்று வானிலைமைய அதிகாரிகள் கணித்துள்ளனர்.
புதுடெல்லி

டெல்லி நகர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் இன்று காலை முதலே கனமழை பெய்தது.  சில மணிநேர மழை பெய்ததால் நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கின.இதனால் தவுலா கவுன்,மதுரா ரோடு, மோதி பாக், பழைய டெல்லியின் பல பகுதிகள், பிரகதி மைதான் உள்ளிட்ட பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. பல மேம்பாலங்களின் கீழ் வெள்ளம் குளம் போல தேங்கியது. மழை நீடிக்கும் நிலையில், ஆறாக மாறிய ரோடுகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு தத்தளித்தவாறு சென்றன.

எட்டு நாட்களில் இரண்டாவது முறையாக, இன்று காலை குர்கான் சாலைகள் நீரில் மூழ்கின.பாஸ்கோ போக்குவரத்து விளக்கு, கேலரியா சந்தை போக்குவரத்து விளக்கு, மேபீல்ட் கார்டன், பிலாஸ்பூர் சவுக் மற்றும் உத்யாக் விஹாரில் உள்ள ராம் சவுக் ஆகியவை பாதிப்புக்கு உள்ளாகின.

டெல்லியில் விமான நிலையம் அமைந்துள்ள பாலம் பகுதியில் இருக்கும் உல்லான் பட்டார் சாலையில் சென்று கொண்டிருந்த டெல்லி போக்குவரத்துக் கழக பேருந்துக்குள் மழை நீர் புகுந்தது.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் (ஏ.என்.ஐ) டெல்லி, பகதூர்கர், ரோஹ்தக், மட்டன்ஹெயில் மற்றும் ஜஜ்ஜார் மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகளில் இடியுடன் கூடிய ம்ழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது.

மேலும் வானிலை மையம் டெல்லிக்கு 'ஆரஞ்சு எச்சரிக்கை' வழங்கி உள்ளது.புதன்கிழமை முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது, மேலும்  சனிக்கிழமை வரை லேசான மழை மற்றும் தூறல் மழை தொடரும் என்று வானிலைமைய அதிகாரிகள் கணித்துள்ளனர்.