மாநில செய்திகள்

எங்கள் முயற்சியும், சசிகலாவின் முயற்சியும் அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான்: டிடிவி தினகரன் + "||" + Our effort and Sasikala's effort is to restore the AIADMK: TTV Dinakaran

எங்கள் முயற்சியும், சசிகலாவின் முயற்சியும் அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான்: டிடிவி தினகரன்

எங்கள் முயற்சியும், சசிகலாவின் முயற்சியும் அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான்: டிடிவி தினகரன்
எங்கள் முயற்சியும், சசிகலாவின் முயற்சியும் அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான் என்று அமமுக பொதுச்செயலாளார் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சி, 

எங்கள் முயற்சியும், சசிகலாவின் முயற்சியும் அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “அதிமுக தொடங்கப்பட்டது முதல் ஒற்றைத்தலைமையில்தான் பயணித்தது. மீண்டும் அது சரியாகும், தேர்தலில் வெற்றி, தோல்வி எந்த தடையும் ஏற்படுத்தாது. தங்கள் இலக்கை நோக்கி பயணிப்போம். எங்கள் முயற்சியும், சசிகலாவின் முயற்சியும் அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான். அதை நோக்கிதான் பயணம் செய்கிறோம். கொள்கைக்காக வந்தவர்கள் எங்களுடன் இலக்கை நோக்கி பயணிப்பார்கள், சுயநலத்திற்காக வந்தவர்கள் செல்கின்றனர். திமுகவினர் எதிர்க்கட்சியாக இருந்தபோது எதையெல்லாம் எதிர்த்துப் போராடினார்களோ அதை தற்போது மறந்து செயல்படுகிறார்கள்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வேதா இல்ல விவகாரம்: மேல் முறையீடு செய்ய அதிமுக முடிவு
வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்ற ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்கக்கோரி அதிமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2. வரும் 24ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
ஒ.பி.எஸ் - இ.பி.எஸ் தலைமையில் வரும்24ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
3. தனித்தனியாக ஆய்வு செய்வது ஏன்? ஓ பன்னீர் செல்வம் விளக்கம்
தனித்தனியாக ஆய்வு செய்வதால் தனியாக செயல்படுகிறார்கள் எனக்கூறுவது ஏற்புடையதல்ல என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
4. எங்கள் ராணுவத்தை சீர்குலைக்க சீனா முயற்சி: தைவான் குற்றச்சாட்டு
தங்கள் நாட்டு ராணுவத்தை சீர்குலைக்க சீனா முயற்சி செய்வதாக தைவான் குற்றம் சாட்டியுள்ளது.
5. விரைவில் அனைவரையும் நேரில் சந்திப்பேன் சசிகலா தொண்டர்களுக்கு கடிதம்
விரைவில் அனைவரையும் நேரில் சந்திக்க இருப்பதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் என சசிகலா குறிப்பிட்டு தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.