தேசிய செய்திகள்

கேரளாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 22,129 பேருக்கு தொற்று + "||" + Kerala logs 22,129 new COVID cases, 156 deaths

கேரளாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 22,129 பேருக்கு தொற்று

கேரளாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 22,129 பேருக்கு தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,129 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனாவின் 2வது அலையின் பாதிப்புகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. இந்நிலையில் கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,129 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக கேரள மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “ மாநிலத்தில் புதிதாக 22,129 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 156 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 16,326 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13,415 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மொத்தம் 31,43,043 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 1,45,371 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் புதிதாக 416 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
மராட்டியத்தில் நேற்று புதிதாக 46 ஆயிரத்து 393 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
2. கேரளாவில் 45 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று பாதிப்பு
கேரளாவில் தற்போது 2,47,227 லட்சம் பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3. வண்டலூர் பூங்காவில் விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை - பூங்கா இயக்குனர் தகவல்
வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களே கொரோனா பாதிப்பில் உயிரிழக்கின்றனர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் பின்விளைவுகள் ஏற்பட்டு உள்ளது என்ற எந்த புகாரும் வரவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
5. 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.