தேசிய செய்திகள்

கேரளாவில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வு: மாநில சுகாதாரத்துறை + "||" + Five more test positive for Zika in Kerala; total reported cases 56: state health minister

கேரளாவில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வு: மாநில சுகாதாரத்துறை

கேரளாவில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வு: மாநில சுகாதாரத்துறை
கேரளாவில் இன்று புதிதாக மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,

கேரளத்தில் இன்று புதிதாக மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டு சிறார் உள்பட 5 பேருக்கு ஜிகா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட 5 பேர் 38, 17, 26, 12 மற்றும் 37 வயதினர் ஆவர். இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. இதில் 8 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின் வைராலஜி ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் எவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. அனைவரும் சீராக உள்ளனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் 45 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று பாதிப்பு
கேரளாவில் தற்போது 2,47,227 லட்சம் பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2. 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
3. கேரளாவில் 41 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று பாதிப்பு
கேரளாவில் தற்போது 2.23 லட்சம் பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4. கேரளாவில் முதல் டோஸ் தடுப்பூசி 100% செலுத்தப்பட்டது - மாநில அரசு தகவல்
கேரளாவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 100% செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. கேரளாவில் மேலும் உயர்ந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 46,387 பேருக்கு தொற்று..!
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,387 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.