மாநில செய்திகள்

ஜூலை 27: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம் + "||" + July 27: The full status of corona damage in Tamil Nadu by district

ஜூலை 27: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்

ஜூலை 27: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,767 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 25,52,049 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 24,95,895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 2,312 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 29 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 33,966 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் இன்று மேலும் 169 பேருக்கும், சென்னையில் மேலும் 139 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 5,37,386 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 8,312 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 3,68,15,337 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,43,310 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 3,59,45,035 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,42,539 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 22,188 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 14,91,084 பேர் ஆண்கள் (இன்று-1,030 பேர்), 10,60,927 பேர் பெண்கள் (இன்று-737 பேர்). தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 திருநங்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை விவரம்:-தொடர்புடைய செய்திகள்

1. “நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்” : பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மருத்துவ கல்லூரிகள் திறப்பு விழாவில் பிரதமர் மோடியிடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
2. 11 மருத்துவ கல்லூரிகள்: “தமிழகத்துக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்” - மோடிக்கு எல்.முருகன் நன்றி
புதிதாக 11 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்துக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
3. தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு எதற்கெல்லாம் தடை முழு விவரம்
தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
4. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு...?
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. சுகாதார செயல்திறனுக்கான தரவரிசை பட்டியல்- தமிழகத்திற்கு 2-ம் இடம்
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுகாதார செயல்திறனுக்கான தரவரிசை பட்டியலில் தமிழகத்திற்கு 2-ம் இடம் கிடைத்துள்ளது.