உலக செய்திகள்

இந்தோனேசியாவில் புதிதாக 45,203 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 2,069 பேர் பலி + "||" + Indonesia Covid-19; 45,203 New Cases, 2,069 Deaths

இந்தோனேசியாவில் புதிதாக 45,203 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 2,069 பேர் பலி

இந்தோனேசியாவில் புதிதாக 45,203 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 2,069 பேர் பலி
இந்தோனேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜகார்தா, 

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.57 கோடியை தாண்டி உள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41 லட்சத்து 88 ஆயிரத்து 862 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது இந்தோனேசியா 14-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்தோனேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தோனேசியாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 32,39,936 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 2,069 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 86 ஆயிரத்து 835 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 47,128 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளநிலையில், இதுவரை 25,96,820 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 5,56,281 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,083 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,083 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
2. இந்தோனேசியாவில் 40 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!
இந்தோனேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38 லட்சத்தைக் கடந்தது
இந்தோனேசியாவில் ஒரே நாளில் 30,788 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இந்தோனேசியாவில் ராணுவத்தில் சேர பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை நிறுத்தம்
ராணுவத்தில் சேரும் பெண்களுக்கு இனி கன்னித்தன்மை சோதனை கிடையாது என இந்தோனேசியா தெரிவித்துள்ளது.
5. இந்தோனேசியாவில் புதிதாக 24,709 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,466 பேர் பலி
இந்தோனேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,709 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.