தேசிய செய்திகள்

முதல்-மந்திரி மாற்றத்தால் கர்நாடகத்தில் வளர்ச்சி பணிகள் முடங்கி உள்ளன - ஜி.டி.தேவேகவுடா பேட்டி + "||" + Development work in Karnataka is paralyzed by the change of First Minister - GT Devegowda

முதல்-மந்திரி மாற்றத்தால் கர்நாடகத்தில் வளர்ச்சி பணிகள் முடங்கி உள்ளன - ஜி.டி.தேவேகவுடா பேட்டி

முதல்-மந்திரி மாற்றத்தால் கர்நாடகத்தில் வளர்ச்சி பணிகள் முடங்கி உள்ளன - ஜி.டி.தேவேகவுடா பேட்டி
முதல்-மந்திரி மாற்றத்தால் கர்நாடகத்தில் வளர்ச்சி பணிகள் முடங்கி உள்ளன என்று முன்னாள் மந்திரி ஜி.டி.தேவேகவுடா கூறினார்.
மைசூரு,

மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் மந்திரியுமான ஜி.டி.தேவேகவுடா மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எடியூரப்பாவிடம் இருந்து பா.ஜனதா மேலிடம் முதல்-மந்திரி பதவியை பறித்துள்ளது. அது பா.ஜனதா கட்சியின் தனிப்பட்ட விஷயம். அதைப்பற்றி நான் இங்கு பேசமாட்டேன். மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். 

மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை அரசு உடனடியாக செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு முதல்-மந்திரி மாற்றம் மற்றும் மந்திரிசபை மாற்றத்தில் பா.ஜனதா அரசு கவனம் செலுத்துவதை கண்டிக்கிறேன். மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் முடங்கி உள்ளன. அதனால் உடனே மந்திரிகளை நியமித்து நிவாரண பணிகளை அரசு முடுக்கிவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நிலக்கரி பற்றாக்குறையால் கர்நாடகம் இருளில் மூழ்கும் அபாயம்: டி.கே.சிவக்குமார்
நிலக்கரி பற்றாக்குறையால் கர்நாடகம் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக டி.கே.சிவக்குமார் கூறினார்.
2. வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் கர்நாடகம் முதல் இடம்: மந்திரி முருகேஷ் நிரானி
வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது என மந்திரி முருகேஷ் நிரானி கூறினார்.
3. 3 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கர்நாடகம் வந்தார்
3 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று கர்நாடகம் வந்தார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
4. விவசாய திட்டங்களை அமல்படுத்துவதில் கர்நாடகம் முன்மாதிரி மாநிலம் - மந்திரி பி.சி.பட்டீல் பேட்டி
விவசாய திட்டங்களை அமல்படுத்துவதில் கர்நாடகம் முன்மாதிரி மாநிலம் என கர்நாடக விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் தெரிவித்துள்ளார்.
5. மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட ஒருபோதும் விடமாட்டோம்; தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை
போராட்டத்தை தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தொடங்கி வைத்தார். உண்ணாவிரத போராட்டத்திற்கு அண்ணாமலை தலைமை வகித்தார்.