தேசிய செய்திகள்

போலி கொரோனா பரிசோதனைகள்: மாநிலங்களிடம் மத்திய அரசு விளக்கம் கேட்பு + "||" + Pseudo-corona experiments: federal request for explanation from states

போலி கொரோனா பரிசோதனைகள்: மாநிலங்களிடம் மத்திய அரசு விளக்கம் கேட்பு

போலி கொரோனா பரிசோதனைகள்: மாநிலங்களிடம் மத்திய அரசு விளக்கம் கேட்பு
போலி கொரோனா பரிசோதனைகள் தொடர்பாக மாநிலங்களிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டது.
புதுடெல்லி,

உயிராபத்தை ஏற்படுத்தும் போலி கொரோனா பரிசோதனை மோசடிகளில் பல தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பதை அரசு அறிந்திருக்கிறதா என நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தக் கேள்விக்கு மத்திய சுகாதார ராஜாங்க மந்திரி பாரதி பிரவிண் பவார் எழுத்து மூலம் பதில் அளித்தார்.

அதில் அவர், “உத்தரகாண்ட் மாநிலத்தில் போலி கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இது போன்ற போலி பரிசோதனைகள் எங்கெங்கு நடந்துள்ளன என தொடர்புடைய மாநிலங்களிடம் விளக்கம் அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது. 

உத்தரகாண்டில் நடந்துள்ள போலி கொரோனா பரிசோதனைகளில், தொடர்புடைய நிறுவனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடக்கிறது. மேலால் சோதனைகள் நடத்துவதில் இருந்து அந்த பரிசோதனைக்கூடங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கான நிதி பட்டுவாடா நிறுத்தப்பட்டுள்ளது” என கூறி உள்ளார்.