தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தை செயல்பட விடுங்கள் - எதிர்க்கட்சிகளுக்கு வேளாண் மந்திரி அறிவுரை + "||" + Let the parliament function Minister of Agriculture advises the Opposition

நாடாளுமன்றத்தை செயல்பட விடுங்கள் - எதிர்க்கட்சிகளுக்கு வேளாண் மந்திரி அறிவுரை

நாடாளுமன்றத்தை செயல்பட விடுங்கள் - எதிர்க்கட்சிகளுக்கு வேளாண் மந்திரி அறிவுரை
விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் நாடாளுமன்றத்தை செயல்பட விடுங்கள் என்று எதிர்க்கட்சிகளுக்கு வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் அறிவுரை வழங்கினார்.
புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, விவசாயிகள் காப்பீட்டு திட்டம் தொடர்பான ஒரு துணை கேள்விக்கு மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் பதில் அளித்தார்.அப்போது, ‘பெகாசஸ்’ உளவு விவகாரம், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

அதை சுட்டிக்காட்டி நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:-

விவசாயிகள் தொடர்பான 15 கேள்விகள் இருக்கின்றன. விவசாயிகள் மீது எதிர்க்கட்சிகளுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், சபையை செயல்பட விடவேண்டும். அரசு என்ன சொல்கிறது என்று கவனிக்க வேண்டும். அமளிகளால் சபையின் கண்ணியம் குறைகிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்ற ஊழியர்கள் 402- பேருக்கு கொரோனா
பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்ற ஊழியர்கள் 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் தேசிய கீதம் பாடி போராட்டம்
எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன் தேசிய கீதம் பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. நாடாளுமன்ற நேரடி ஒளிபரப்பை காண மொபைல் செயலி அறிமுகம்..!
நாடாளுமன்ற நேரடி ஒளிபரப்பை காண மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
4. நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டம்?
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் ஒருநாள் முன்கூட்டியே அதாவது நாளையுடன் முடித்துக்கொள்ளப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
5. நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சஸ்பெண்ட்
நாடாளுமன்றத்தில் அவை நடத்தை விதிகளை மீறியதால் நடப்பு கூட்டத்தொடரில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஒ பிரையன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.