மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது - ஓ. பன்னீர்செல்வம் பேட்டி + "||" + AIADMK to meet whenever local elections take place. Is ready - O.Panneerselvam

உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது - ஓ. பன்னீர்செல்வம் பேட்டி

உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது - ஓ. பன்னீர்செல்வம் பேட்டி
உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் அதனை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
மதுரை,

தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேனி எம்.பி. ரவீந்திரநாத் ஆகியோர் டெல்லி சென்று, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து நேற்று இரவு அவர்கள் இருவரும் மதுரை விமான நிலையத்திற்கு வந்தனர்.

அங்கு ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், “உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடந்தாலும் அ.தி.மு.க. அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளது என்றார். அ.தி.மு.க.வை கைப்பற்றுவோம் என்று டி.டி.வி.தினகரன் கூறியது, முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது உள்ளிட்டவை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் அதற்கு பதில் அளிக்காமல் கிளம்பிச் சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட தி.மு.க.வில் 24-ந் தேதி விருப்ப மனு
கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட தி.மு.க.வில் 24-ந் தேதி விருப்ப மனு வாங்கப்படுகிறதுஎன அமைச்சர் அறிவித்து உள்ளார்.
2. இந்த 32 வார்டுகளில் இருந்துதான் சென்னைக்கு முதல் பெண் மேயர்...!
சென்னையில் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 32 வார்டுகளில் இருந்து வெற்றிபெறும் ஒரு பெண்தான் மேயராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3. நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியீடு: ஈரோடு மாநகராட்சியில் 4 லட்சத்து 43 ஆயிரத்து 191 வாக்காளர்கள்
நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் ஈரோடு மாநகராட்சியில் 4 லட்சத்து 43 ஆயிரத்து 191 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.
4. மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தேர்தல்: தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வராததால் மீண்டும் ஒத்தி வைப்பு
கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் மறைமுக தேர்தலுக்கு தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் யாரும் வராததால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
5. உள்ளாட்சி தேர்தல் குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கூடிய விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான நடவடிக்கைகளை மாவட்ட தேர்தல் ஆணையம் தீவிரமாக எடுத்து வருகிறது.