அமெரிக்காவில் புழுதிப்புயலில் 22 வாகனங்கள் சிக்கின; 8 பேர் பலி


அமெரிக்காவில் புழுதிப்புயலில் 22 வாகனங்கள் சிக்கின; 8 பேர் பலி
x
தினத்தந்தி 28 July 2021 12:29 AM GMT (Updated: 28 July 2021 12:50 AM GMT)

அமெரிக்காவில் ஏற்பட்ட புழுதிப்புயலில் 22 வாகனங்கள் சிக்கி கொண்டதுடன் 8 பேர் பலியாகி உள்ளனர்.




வாஷிங்டன்,

அமெரிக்கா நாட்டில் கொரோனாவால் உலக அளவில் அதிக பலி, பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இந்த நிலையில், அந்த நாட்டில் உத்தா நகரின் நெடுஞ்சாலை பகுதியில் புழுதிப்புயல் தாக்கியுள்ளது.

இதன் காரணமாக சாலையில் எதிரே வாகனங்கள் தெரியாத அளவிற்கு வாகனங்களின் முகப்பு கண்ணாடிகள் புழுதியால் மூடின. இதனால், வாகன ஓட்டிகள் நிலைகுலைந்தனர்.

ஓட்டுனர்கள் கட்டுப்பாட்டை இழந்த 22 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக மோதி கொண்டன. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இதில், 5 பேர் ஒரே வாகனத்தில் இருந்தவர்கள். பலியான மற்ற 3 பேர் வேறு வாகனங்களில் இருந்தவர்கள்.

இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டனர். இவர்கள் ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்த 10 பேரில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொல்லப்பட்ட 8 பேரில் 4 பேர் குழந்தைகள் ஆவர்.  இதனை தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.


Next Story