உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு; இங்கிலாந்து நாட்டில் மார்ச் 17க்கு பின் 131 பேர் உயிரிழப்பு + "||" + Corona damage; 131 deaths in the UK since March 17

கொரோனா பாதிப்பு; இங்கிலாந்து நாட்டில் மார்ச் 17க்கு பின் 131 பேர் உயிரிழப்பு

கொரோனா பாதிப்பு; இங்கிலாந்து நாட்டில் மார்ச் 17க்கு பின் 131 பேர் உயிரிழப்பு
இங்கிலாந்து நாட்டில் மார்ச் 17ந்தேதிக்கு பின் அதிக அளவாக கொரோனா பாதிப்புக்கு 131 பேர் உயிரிழந்து உள்ளனர்.



லண்டன்,

அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.  இதற்காக கொரோனா தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 19ந்தேதியில் இருந்து நாடு முழுவதும் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து அமல்படுத்தினார்.  இதனால் முக கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது போன்ற விசயங்கள் கட்டாயம் இல்லை என அறிவிப்பு வெளியானது.

இதனால், தொற்று பரவல் ஏற்பட கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை செய்திருந்தனர்.  எனினும் இந்த நடைமுறை அமலானது.

இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டில் நேற்று ஒரே நாளில் 23,511 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  அந்நாட்டில், 4.65 கோடி பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.  3.69 கோடி பேருக்கு 2வது டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது என சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், கடந்த மார்ச் 17ந்தேதிக்கு பின் அந்நாட்டில் மிக அதிக அளவாக 131 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 1,29,303 ஆக உயர்ந்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் மூலமே தேர்வுகள் நடைபெறும் அமைச்சர் பொன்முடி உறுதி
கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் மூலமே பருவத்தேர்வுகள் நடைபெறும் என்று விழுப்புரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
2. தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு
நேற்றைய பாதிப்பு 28,515 ஆக இருந்த நிலையில் இன்றைய பாதிப்பு குறைந்துள்ளது
3. கொரோனா பாதிப்பு நிலவரம்: தமிழகம் உள்பட தென் மாநிலங்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை
தென் மாநிலங்களில் கொரோனா நிலவரம், பொது சுகாதாரத்துறையின் தயார் நிலை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
4. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 36.64 -கோடியாக உயர்வு
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 7.14 கோடியாக உள்ளது.
5. தமிழகத்தில் பரிசோதனை 6 கோடியை கடந்தது; 29 ஆயிரத்து 976 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் பரிசோதனை எண்ணிக்கை 6 கோடியை கடந்துள்ளது. 29 ஆயிரத்து 976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.