தேசிய செய்திகள்

கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை- இன்று பதவி ஏற்கிறார் + "||" + Enter Basavaraj Bommai As Chief Minister, BS Yediyruappa Approves

கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை- இன்று பதவி ஏற்கிறார்

கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை- இன்று பதவி ஏற்கிறார்
கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை இன்று (புதன்கிழமை) பதவி ஏற்கிறார்.
பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டதை அடுத்து அவர் பதவி விலகினார். இதையடுத்து கர்நாடகத்தின் அடுத்த முதல்-மந்திரி யார்? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நேற்று இரவு நடைபெற்றது.

இதில் எடியூரப்பா, மேலிட பொறுப்பாளர் அருண்சிங், கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், மேலிட பார்வையாளர்கள் தர்மேந்திர பிரதான், கிஷன்ரெட்டி, தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இதில் கட்சியின் சட்டசபை குழு தலைவராக அதாவது புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். இதனை எடியூரப்பா அறிவித்தார். அதன் பிறகு பசவராஜ் பொம்மை மேடைக்கு வந்து எடியூரப்பாவின் காலில் விழுந்து ஆசி பெற்றார். பின்னர் பசவராஜ் பொம்மை ராஜ்பவனுக்கு சென்று கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் வழங்கினார்.

அதை ஏற்றுக்கொண்ட கவர்னர் தாவர்சந்த் கெலாட், ஆட்சி அமைக்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு பெங்களூருவில் உள்ளகவர்னர் மாளிகையில் நடைபெறும் விழாவில் கர்நாடக புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவி ஏற்க உள்ளார். அதைத்தொடர்ந்து புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா அடுத்த ஒரு வாரத்திற்குள் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் மேலும் 42,470- பேருக்கு கொரோனா
கடந்த சில தினங்களாக பெங்களூருவில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது.
2. கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 47,754 பேருக்கு தொற்று..!
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 47,754 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கர்நாடகாவில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது....!
கர்நாடகாவில் இன்று மேலும் 40,499 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. திடீரென இடிந்து விழுந்த தரைப்பாலம்: சிக்கிக்கொண்ட சரக்கு வாகனம்
கர்நாடகாவில் தரைப்பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் சரக்கு வாகனம் சிக்கிக்கொண்டது.
5. கர்நாடகாவில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 41,457 பேருக்கு தொற்று..!
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,457 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.