தேசிய செய்திகள்

பெகாசஸ் விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் முக்கிய ஆலோசனை + "||" + Opposition parties hold meeting to chalk out future strategy

பெகாசஸ் விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் முக்கிய ஆலோசனை

பெகாசஸ் விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் முக்கிய ஆலோசனை
பெகாசஸ் ஊழல் தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சிகளும் மக்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுக்கும் என்று புதன்கிழமை வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. இந்த மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளே பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். 

இதனால் அவைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும், பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இதனால் இரு அவைகளும் முடங்கின. 

பெகாசஸ், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமை தாங்கினார் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கலந்து கொண்டார்.

நாடாளுமன்றத்தில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில், மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர்கள் பெகாசஸ் தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக ஒன்றிணைந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் ஒரு விவாதம் நடத்த  அரசாங்கத்திற்கு  அழுத்தம் கொடுக்க முடிவு செய்தனர். 

பெகாசஸ் ஊழல் தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சிகளும் மக்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுக்கும் என்று புதன்கிழமை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதுபோல் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி  அமித் ஷா மற்றும் நாடாளுமன்ற விவகார மந்திரி  பிரல்ஹாத் ஜோஷி ஆகியோர் இன்று  நாடாளுமன்ற பிரதமர் அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்ற கூட்டத்தொடர்: சோனியாகாந்தி ஆலோசனை
டெல்லியில் சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
2. பெகாசஸ் விவகாரம் : 14 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 18 எம்.பி.க்கள் கூட்டறிக்கை
பெகாசஸ் விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் விவாதிக்க 14 எதிர்க் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
3. மாநிலங்களவையில் அமளி:திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் இடைநீக்கம்
பெகாசஸ் விவகாரத்தை எழுப்பி மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
4. பா.ஜ.க.,ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் உறுதியாக நிற்க வேண்டும் -ராகுல் காந்தி
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ராகுல்காந்தி மற்றும் எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் பேரணியாக சென்றனர்.
5. நாடாளுமன்றத்தை அவமதிக்கும் எதிர்க்கட்சிகள் ; பிரதமர் மோடி குற்றச்சாட்டு
இன்று எதிர்க்கட்சிகளை சமாளிப்பது குறித்த பா.ஜ.க. எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.