மாநில செய்திகள்

அ.தி.மு.க.வை யாராலும் கைப்பற்ற முடியாது;தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது - ஓ.பன்னீர்செல்வம் + "||" + No place for Sasikala, her kin in AIADMK OPS Hints

அ.தி.மு.க.வை யாராலும் கைப்பற்ற முடியாது;தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது - ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க.வை யாராலும் கைப்பற்ற முடியாது;தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது - ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக.,வை யாராலும் கைப்பற்ற முடியாது. கட்சியை தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
போடி,

போடியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று உரிமை குரல் முழக்க போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி அ.தி.மு.க.வினர் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதன் பின் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  

அதிமுக.,வை யாராலும் கைப்பற்ற முடியாது. கட்சியை தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது. நான்கரை ஆண்டுகளாக நானும், பழனிசாமியும் ஒன்றாக இணைந்து தனிப்பட்ட குடும்பம் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலையில் அதிமுக.,வை வழிநடத்தி வருகிறோம். எந்த நோக்கத்திற்காக அதிமுக கட்சி தொடங்கப்பட்டதோ, அந்த நிலை தொடரும். ரவீந்திரநாத் குமார் எம்.பி.க்கு அமைச்சரவையில் இடம் கிடைப்பது குறித்து நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அமைச்சரவையில் யார் இடம்பெற வேண்டும் என்பதை முடிவு செய்ய மத்தியில் அறுதிப்பெரும்பான்மை பெற்றிருக்கக்கூடிய பாஜகவுக்குத்தான் உரிமை உள்ளது” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. அதிமுகவில் சசிகலா, தினகரனை இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை - கடம்பூர் ராஜு
அதிமுகவில் இனி இரட்டை தலைமைதான் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
2. ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை...
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை செலுத்தினார்.
3. வடகிழக்கு பருவமழை; வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்
வடகிழக்கு பருவமழை தாக்கத்தால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என ஓ பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
4. விரைவில் அனைவரையும் நேரில் சந்திப்பேன் சசிகலா தொண்டர்களுக்கு கடிதம்
விரைவில் அனைவரையும் நேரில் சந்திக்க இருப்பதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் என சசிகலா குறிப்பிட்டு தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
5. அ.தி.மு.க.பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா தீபாவளி வாழ்த்து
இருள் விலகி ஒளி பிறக்கும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பெயரில் சசிகலா மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெர்வித்து உள்ளார்.