மாநில செய்திகள்

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தயார்-ஓ.பன்னீர் செல்வம் + "||" + Panneer Selvam ready to answer Finance Minister Palanivel Thiagarajan

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தயார்-ஓ.பன்னீர் செல்வம்

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தயார்-ஓ.பன்னீர் செல்வம்
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்ன 55 வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை தி.மு.க. ஜனநாயக விரோத போக்கை கடைபிடித்து வருகிறது என ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
சென்னை

தி.மு.க தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி  அ.தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

தேனி மாவட்டம் போடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், போடி எம்.எல்.ஏவுமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். அவருடன் மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், போடி நகர செயலாளர் பழனிராஜ் உள்ளிட்ட பலரும் கையில் பதாகைகளை ஏந்தி திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்ன 55 வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை / தி.மு.க. ஜனநாயக விரோத போக்கை கடைபிடித்து வருகிறது.  மக்களின் கோரிக்கைகளை அ.தி.மு.க. அரசு 10 ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றி உள்ளது. தி.மு.க.வின் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்பியதால் தி.மு.க. வெற்றி பெற்றது.

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தயார். நான் இருக்கும் போது நிதி துறை செயலாளராக இருந்தவர் தான் இப்போதும் இருக்கிறார் அவருக்கு தெரியும் என கூறினார்.

அதே போல் சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துக்கொண்டார். தி.மு.க அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதில் தி.மு.க. அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

1. பெரியகுளத்தில் தேவர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை
பெரியகுளத்தில் தேவர் சிலைக்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
2. கண்கலங்கிய ஓ. பன்னீர்செல்வம்: கைகளை பிடித்து ஆறுதல் கூறிய சசிகலா
முதல்-அமைச்சர் .மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்
3. ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைவு:அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைவுக்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
4. ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி!!
ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள், உட்பட அனைத்துக் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
5. மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்
மேகதாது அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு பா.ஜ.க. எதிர்க்கும்; தமிழ்நாடு அரசுக்கு துணை நிற்கும்