பிற விளையாட்டு

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் இறுதிப்போட்டியில் இருந்து நடப்பு சாம்பியன் திடீர் விலகல் + "||" + Olympic champ Biles withdraws from all-around competition

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் இறுதிப்போட்டியில் இருந்து நடப்பு சாம்பியன் திடீர் விலகல்

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் இறுதிப்போட்டியில் இருந்து  நடப்பு சாம்பியன்  திடீர் விலகல்
தனது மன ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இறுதிப்போட்டியில் இருந்து விலகியதாக அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் தெரிவித்துள்ளார்.
டோக்கியோ

2016ல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியில் 4 தங்கப்பதக்கங்களை வென்ற அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ்,  டோக்கியோ ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

 ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற  ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் 4  பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்றார். இதே போல், அணி பிரிவிலும் அமெரிக்காவுக்கு தங்கப்பதக்கம் வென்று கொடுத்தார்.

ஆல் ரவுண்டு பிரிவில் 5 முறையும்,  புளோர் பிரிவில் 5 முறையும், பேலன்ஸ் பீம் பிரிவில் 3 முறையும், வாலட் பிரிவில் 2 முறையும் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள சிமோன் பைல்ஸ்,  உலகின் தலைசிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக கருதப்படுகிறார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வார் என்று கணிக்கப்பட்ட நிலையில், நேற்று நடைபெற்ற அணி பிரிவு இறுதிப்போட்டியில் இருந்து திடீரென விலகினார். இதனைத் தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த ஆல் ரவுண்டு தனிநபர் பிரிவு இறுதிப்போட்டியில் இருந்தும் விலகுவதாக சிமோன் பைல்ஸ் அறிவித்துள்ளார்.

தனது மன ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இறுதிப்போட்டியில் இருந்து விலகியதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். மன நலன் மற்றும் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சிமோன் பைல்ஸின் முடிவுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு அளித்த ரசிகர்கள், அவர் விரைவில் மீண்டுவர வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவின் புதிய தடையால் வடகொரியா கோபம்: கடும் விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை
வட கொரியா அண்மையில் மேற்கொண்ட ஏவுகணை சோதனைகளுக்குப் பதிலடியாக, அந்த நாட்டின் 5 அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
2. 2021ம் ஆண்டின் விண்வெளி ஆராய்ச்சியில் முன்னிலை வகித்த சீனா!
கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 55 விண்களங்களை விண்ணில் ஏவியுள்ளது
3. ஒமைக்ரான் பாதிப்பு: அமெரிக்காவில் சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தீவிரம்
ஒமைக்ரான் பாதிப்பின் எதிரொலியாக அமெரிக்காவில் சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
4. ஜெர்மனி, டென்மார்க் நாடுகளுக்கு செல்ல அமெரிக்கா தடை..!
கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து ஜெர்மனி மற்றும் டென்மார்க் நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
5. 25 கார்கள்....! 80 கொள்ளையர்கள்...! 60 வினாடிகள்..! வந்தார்கள் எடுத்தார்கள் சென்றார்கள்
சனிக்கிழமை இரவு 25 கார்களில் முகமூடி அணிந்த 80 நபர்கள் வந்துள்ளனர். கைகளில் ஆயுதங்களுடன் நார்ட்ஸ்ட்ரோம் அங்காடிக்குள் நுழைந்த அவர்கள், கைகளில் கிடைத்த பொருட்களை எல்லாம் கொள்ளையடித்தனர்.