பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை: பிரவீன் ஜாதவ் ரஷிய வீரரை வெற்றி கொண்டு அமெரிக்க வீரரிடம் தோல்வி + "||" + Indian archer PravinJadhav's campaign at the TokyoOlympics was brought to an end with a 6-0 loss to USA's Brady Ellison in the second round.

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை: பிரவீன் ஜாதவ் ரஷிய வீரரை வெற்றி கொண்டு அமெரிக்க வீரரிடம் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை: பிரவீன் ஜாதவ் ரஷிய வீரரை வெற்றி கொண்டு அமெரிக்க வீரரிடம் தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை தனிநபர் பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். ஆனால் அதில் அமெரிக்க வீரரிடம் தோல்வி
டோக்கியோ:

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்கள் வில்வித்தை தனிநபர் வெளியேற்றுதல் சுற்று நடைபெற்றது. 

இந்தியாவின் தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய், அதானு தாஸ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் ஆண்கள்  அணி பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய், அதானு தாஸ் ஆகியோர் கொண்ட அணி தோல்வியடைந்தது. இதே போல், தனிநபர் சுற்றில் தருண் தீப் ராய் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார்.

இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ், ரஷியாவைச் சேர்ந்த பஜார்ஷாபோவ் கால்சனை எதிர்கொண்டார். இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரவீன் ஜாதவ், 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று 32 வது சுற்றுக்கு முன்னேறினார். இது காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆகும். 

16-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் எலிசனை பிரவீன் ஜாதவ் எதிர்கொண்டார்.ஆனால் அவரிடம் 6-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் ஜப்பான் தொடர்ந்து முதலிடம்
டோக்கியோ ஒலிம்பிக் பதக்கபட்டியலில் ஆரம்பித்த முதல் நாள் சீனா முதல் இடத்தில் இருந்தது. அடுத்து அமெரிக்கா முதல் இடத்தை பிடித்தது. தற்போது ஜப்பான் பிடித்துள்ளது