பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை காலிறுதிக்குள் நுழைந்தார் தீபிகா குமாரி + "||" + Deepika Kumari qualifies for the quarter finals after a close match.

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை காலிறுதிக்குள் நுழைந்தார் தீபிகா குமாரி

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை காலிறுதிக்குள் நுழைந்தார் தீபிகா குமாரி
ஒலிம்பிக் பெண்கள் வில்வித்தை போட்டியின் முதல் நாக் அவுட் சுற்றில் பூட்டான் வீராங்கனை கர்மாவை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார் இந்திய வீராங்கனை தீபிகா குமரி.
டோக்கியோ:

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்கள் வில்வித்தை தனிநபர் வெளியேற்றுதல் சுற்று நடைபெற்றது. 

இந்தியாவின் தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய், அதானு தாஸ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் ஆண்கள்  அணி பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய், அதானு தாஸ் ஆகியோர் கொண்ட அணி தோல்வியடைந்தது. இதே போல், தனிநபர் சுற்றில் தருண் தீப் ராய் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார்.

தீபிகா குமாரி வில்வித்தை ரீகர்வ் முதல் சுற்றில் பூடான் வீராங்கனை கர்மாவை 6-0 என்ற கணக்கில் மிக எளிதாக வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.  இரண்டாவது சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஜெனிபரை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார். பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் 25-26, 28-25, 27-25, 24-25, 26-25 என வீழ்த்தினார். இதன் மூலம் காலிறுதிக்குள் நுழைந்தார் தீபிகா குமாரி.

தொடர்புடைய செய்திகள்

1. டிஆர்எஸ் முறைக்கு எதிர்ப்பு; ‘ஸ்டெம்ப் மைக்’கில் பதிவான இந்திய வீரர்களின் உரையாடல்கள்
உங்கள் அணியில் கவனம் செலுத்துங்கள், எதிரணியின் மீது அல்ல என்று விராட் கோலி மிகக்கடுமையாக சாடியுள்ளார்.
2. உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீரர்கள் முன்னேற்றம்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
3. உலக குத்துச்சண்டை: முதல் சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் முதல் சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்றனர்.
4. பாரா ஒலிம்பிக்: 2 மணி நேரத்தில் 4 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை
ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே மணிநேரத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
5. ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி தேநீர் விருந்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 14-ம் தேநீர் விருந்து அளிக்கிறார்.