தேசிய செய்திகள்

கொரோனா காலத்தில் அமெரிக்கா பெரும் பாதிப்புகளை சந்தித்தபோது இந்தியா உதவியது: ஆண்டனி பிளிங்கன் + "||" + US, India commitment to democratic values is bedrock of our relationship’: Antony Blinken

கொரோனா காலத்தில் அமெரிக்கா பெரும் பாதிப்புகளை சந்தித்தபோது இந்தியா உதவியது: ஆண்டனி பிளிங்கன்

கொரோனா காலத்தில் அமெரிக்கா பெரும் பாதிப்புகளை சந்தித்தபோது இந்தியா உதவியது: ஆண்டனி பிளிங்கன்
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக இந்தியா மற்றும் அமெரிக்கா திகழ்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

2 நாள்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் இந்தியா வந்துள்ளார். அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி ஏற்ற பின்னர், முதன்முறையாக அவர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.   

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அண்டனி பிளிங்கன் இன்று இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி இருந்தது. 

இந்நிலையில் கொரோனா ஆரம்ப காலத்தில் அமெரிக்கா பெரும் பாதிப்புகளை சந்தித்தபோது இந்தியா உதவியது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக இந்தியா மற்றும் அமெரிக்கா திகழ்கிறது. கொரோனா ஆரம்ப காலத்தில் அமெரிக்கா பெரும் பாதிப்புகளை சந்தித்தபோது இந்தியா உதவியது. தற்போது இந்தியாவிற்கு உதவுவதில் அமெரிக்கா பெருமைக்கொள்கிறது.

கொரோனா தொற்றுநோயை முடிவுக்கு கொண்டுவருவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், மேலும் தடுப்பூசி கூட்டாண்மையில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றாகச் செயல்படும். 


இந்தியாவுக்கு மீண்டும் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எனது குடும்பத்துடன் 40 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்தேன். டெல்லியில் 

ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். அமைதியான, பாதுகாப்பான மற்றும் நிலையான ஆப்கானிஸ்தானில் இந்தியாவும் அமெரிக்காவும் வலுவான ஆர்வத்தை பகிர்ந்து கொள்கின்றன. பிராந்தியத்தில் நம்பகமான பங்காளியாக, ஆப்கானிஸ்தானின் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து முக்கிய பங்களிப்பை அளிக்கும்” என்று அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. 35 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1700-ஐ தாண்டியது
தமிழகத்தில் 35 நாட்களுக்கு பிறகு நேற்று கொரோனா பாதிப்பு மீண்டும் 1,700-ஐ தாண்டியது.
2. சென்னையில் விமான சேவை பாதிப்பு 2 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன
இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையால் சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டன. கத்தார் மற்றும் துபாய் விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன.
3. ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள மோடி இன்று அமெரிக்கா பயணம்
ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதி ஜோ பைடனையும் சந்தித்து பேசுகிறார்.
4. உத்தர பிரதேசத்தில் 205 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் டெங்கு காய்ச்சல் பாதித்த 205 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5. அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் விவகாரம்: அமெரிக்கா, ஆஸ்திரேலியா மீது பிரான்ஸ் கோபம்
அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் விவகார சர்ச்சையை தொடர்ந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிலிருந்து, தூதரை பிரான்ஸ் திரும்பப்பெற்றது சர்வதேச அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.