உலக செய்திகள்

நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சுமார் 1 கோடி தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் அமெரிக்கா + "||" + US sends about 1 million vaccines to Nigeria and South Africa

நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சுமார் 1 கோடி தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் அமெரிக்கா

நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சுமார் 1 கோடி தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் அமெரிக்கா
நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சுமார் 1 கோடி தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்,

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு உதவும் வகையில் தங்கள் வசம் உள்ள 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வரும் நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அடுத்த 6 மாதங்களுக்குள் தடுப்பூசி மற்ற நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அந்த வகையில் ஆசிய நாடுகளான மலேசியா, இந்தோனேசியா, நேப்பாள், பூட்டான் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க அரசு கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்தது. இது தவிர பிற ஆசிய நாடுகளான பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து, லாவோஸ், பப்புவா நியூகினியா, கம்போடியா ஆகிய நாடுகளுக்கும், வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் 92 நாடுகளுக்கும் தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு சுமார் 1 கோடி தடுப்பூசிகளை விரைவில் வழங்க இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நைஜீரியாவிற்கு 40 லட்சம் ‘மாடர்னா’ தடுப்பூசிகளும், தென் ஆப்பிரிக்காவிற்கு 56 லட்சம் தடுப்பூசிகளும் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1.64 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் நைஜீரியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்கு தடுப்பூசிகளை அனுப்பி வைப்பதன் மூலம், அதிபர் ஜோ பைடன் உறுதியளித்தபடி உலக நாடுகளுக்கு 8 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை அமெரிக்கா வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு - டேல் ஸ்டெய்ன் அறிவிப்பு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் அறிவித்துள்ளார்.
2. நைஜீரியா: துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதலை
நைஜீரியாவில் கடந்த மே மாதம் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை கடத்தல் கும்பல் விடுதலை செய்துள்ளது.
3. நைஜீரியா: ராணுவ பயிற்சி பள்ளியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 2 அதிகாரிகள் பலி
நைஜீரியாவில் ராணுவ பயிற்சி பள்ள்ளியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 2 அதிகாரிகள் உயிரிழந்தனர்.
4. நைஜீரியாவில் பிச்சைக்காரர்களுக்கு தடை
நைஜீரியாவில் பிச்சைக்காரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
5. நைஜீரியா: எரிவாயு நிறுவன ஊழியர்கள் பயணித்த பஸ் மீது துப்பாக்கிச்சூடு - 7 பேர் பலி
நைஜீரியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பயணித்த பஸ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.