மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 1,756 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு + "||" + Corona infection affects 1756 people in Tamil Nadu today

தமிழகத்தில் இன்று 1,756 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

தமிழகத்தில் இன்று 1,756 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
தமிழகத்தில் தற்போது 21,521 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 1,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,53,805 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 29 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,995 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 2,394 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,98,289 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 21,521 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இன்று 40 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் இன்று 40 ஆயிரம் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதன்மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. தமிழகத்தில் 21 புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
தமிழகத்தில் நடப்பாண்டில் 21 புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
4. தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பேட்டி
தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார்.
5. 2026-ல் தமிழகத்தில் பாரதீய ஜனதா தான் ஆட்சி செய்யும்: அண்ணாமலை
2026-ல் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி தான் ஆட்சி செய்யும் என சிவகாசியில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.