மாநில செய்திகள்

தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கு: சென்னை ஐகோர்ட்டு நாளை உத்தரவு + "||" + Case related to private school fees: Chennai iCourt orders tomorrow

தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கு: சென்னை ஐகோர்ட்டு நாளை உத்தரவு

தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கு: சென்னை ஐகோர்ட்டு நாளை உத்தரவு
நடப்பு கல்வியாண்டில், தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு நாளை உத்தரவு பிறப்பிக்கிறது
சென்னை, 

கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, 75 சதவீத கட்டணத்தை, முறையே 40, 35 சதவீதம் என இரு தவணைகளாக வசூலித்துக் கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டது.

இந்த வழக்குகள், நீதிபதி கிருஷ்ணகுமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பள்ளிகள் 85 சதவீத கட்டணத்தை வசூலித்துக் கொள்ள சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதாகவும், கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளிகளில் இருந்து நீக்கப்படமாட்டார்கள் என்றும், தனியார் பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கட்டண சலுகை கோரும் மாணவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், நடப்பு 2021-22ம் கல்வியாண்டிலும், 2019-20ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில், 75 சதவீத கட்டணத்தை வசூலிக்க அனுமதியளித்து, ஜூலை 5ம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு தமிழகத்துக்கு பொருந்தாது என்றும், தமிழகத்தை பொறுத்தவரை கட்டண நிர்ணயக் குழு அளித்த பரிந்துரைகளை அரசு பரிசீலிக்கும் என்றும், கட்டண நிர்ணயக் குழுவில் உள்ள காலியிடங்கள் இரு மாதங்களில் நிரப்பப்படும் என்றும் தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்தார்.

தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாநில அரசு நிர்ணயிக்கும் கட்டணமே பொருந்தும் என்று மாணவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணகுமார், நடப்பு கல்வியாண்டில், தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்கு
மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்கு.
2. மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்கு
மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்கு.
3. மஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் தஞ்சை நீதிமன்றத்தில் சரண்
வாணியம்பாடியில் மஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
4. விமானங்களில் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை மாநில மொழிகளில் அறிவிக்க கோரி வழக்கு
விமானங்களில் அவசரகால முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை மாநில மொழிகளில் அறிவிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
5. மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு வழக்கு: பள்ளி ஆசிரியர் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு வழக்கு: பள்ளி ஆசிரியர் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது ஐகோர்ட்டு உத்தரவு.