மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 1,859 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு + "||" + Corona infection affects 1859 people in Tamil Nadu today

தமிழகத்தில் இன்று 1,859 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

தமிழகத்தில் இன்று 1,859 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
தமிழகத்தில் தற்போது 21,207 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 1,859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,55,664 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 28 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,023 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 2,145 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,00,434 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 21,207 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் அக்டோபர் 31-ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
2. தமிழகத்தில் இன்று 1,630 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் தற்போது 17,231 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3. நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா: மத்திய மந்திரி எல்.முருகன்
நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா அமைக்கப்பட உள்ளதாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.
4. இந்தியாவில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 28,326 பேருக்கு தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,326 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் இன்று 40 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் இன்று 40 ஆயிரம் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதன்மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.