தேசிய செய்திகள்

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 45.5 கோடியை கடந்தது + "||" + Corona vaccines administered in India crossed 45.5 crore

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 45.5 கோடியை கடந்தது

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 45.5 கோடியை கடந்தது
இந்தியாவில் இன்று மாலை 7 மணி நிலவரப்படி, இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 45.5 கோடியை கடந்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்களின் கண்டுபிடிப்பான கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று (ஜூலை 29) மாலை 7 மணி வரை, இந்தியா முழுவதும் இதுவரை 45,55,02,438 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 35,57,38,086 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 9,97,64,352 பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று ஒரே நாளில் 46,52,914 டோஸ் தடுப்பூசிகள் நாடு முழுவதும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களில் இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் 201 நாட்களுக்கு பின் குறைந்த கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 201 நாட்களுக்கு பிறகு முதன்முறையாக கொரோனா பாதிப்பு 18,795 ஆக பதிவாகி உள்ளது.
2. நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 86.01 கோடியாக உயர்வு: மத்திய அரசு
இந்தியாவில் இதுவரை 86.01 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 26,041 பேருக்கு தொற்று!
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது.
4. இந்தியாவில் 22 கோடிக்கும் அதிகமானோருக்கு 2 ‘டோஸ்’ தடுப்பூசி
இந்தியாவில் 22 கோடிக்கும் அதிகமானோருக்கு 2 ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் இருந்து ஓமனுக்கு பறவைகள் இறக்குமதி செய்ய தடை
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் இருந்து ஓமனுக்கு பறவைகள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.