மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு + "||" + State Election Commission orders to appoint election officers for 9 districts in Tamil Nadu

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கில், வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்ட மாவட்டங்களில் தேர்தலை நடத்துவது குறித்து தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு இடையே ஆலோசனை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க தற்போது மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமனம் செய்திட மாவட்ட தேர்தல் அலுவலர்கள், கலெக்டர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாகவும், நியமனம் தொடர்பான விவரங்களை நாளைக்குள் அனுப்ப வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இன்று 40 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் இன்று 40 ஆயிரம் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதன்மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. தமிழகத்தில் 21 புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
தமிழகத்தில் நடப்பாண்டில் 21 புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
4. தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பேட்டி
தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார்.
5. 2026-ல் தமிழகத்தில் பாரதீய ஜனதா தான் ஆட்சி செய்யும்: அண்ணாமலை
2026-ல் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி தான் ஆட்சி செய்யும் என சிவகாசியில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.