மாநில செய்திகள்

நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் + "||" + Welfare Office for the Disabled in Nellai CM Stalin opens

நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
நெல்லையில் கட்டப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகங்களில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் முதல்முறையாக திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்குப் புதிய கட்டடம் 3,282 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 

இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலாளர் ஆர்.லால்வேனா, மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகம், இளம் சிறார்களுக்கான காதுகேளாதோர் பயிற்சி மையம், உதவி உபகரணங்கள் வழங்கும் பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்தளம், சிறப்புக் கழிவறை உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் பாளையாங்கோட்டையில் 70 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவிலும், மதுரை ரெயில் நிலையம் அருகே 86 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்துடன் கூடிய மைய கட்டிடங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லையில் 800 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி
நெல்லை மாவட்டத்தில் இன்று 800 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
2. நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 27 பேருக்கு கொரோனா
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 27 பேருக்கு கொரோனா
3. நெல்லையில் ரூ.15 கோடியில் ‘பொருநை அருங்காட்சியகம்’: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நெல்லையில் ரூ.15 கோடி மதிப்பில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
4. நெல்லை அருகே, ஒரே கிராமத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரே வாரத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
5. நெல்லையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ கட்டுமானத்தின் போது ஆற்று மணலை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
‘ஸ்மார்ட் சிட்டி’ கட்டுமானத்தின் போது ஆற்று மணலை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.