உலக செய்திகள்

இங்கிலாந்தில் புதிதாக 24,470 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Britain reports 24,470 COVID-19 cases and 65 deaths on Sunday

இங்கிலாந்தில் புதிதாக 24,470 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இங்கிலாந்தில் புதிதாக 24,470 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,470 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
லண்டன்,

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் பாதிப்புகள் நாளுக்குநாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இங்கிலாந்தில் 60% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று சற்று குறைந்து இருந்தது. இதனை தொடர்ந்து அங்கு முழுமையாக கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,470 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 58,80,667 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 29 ஆயிரத்து 719 ஆக உயர்ந்துள்ளது. 

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 45 லட்சத்து 20 ஆயிரத்து 199 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 12,30,749 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் புதிதாக 29,612 பேருக்கு கொரோனா பாதிப்பு
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29,612 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74 லட்சத்தை தாண்டியது!
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,144 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இங்கிலாந்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 30,597 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இங்கிலாந்தில் புதிதாக 26,628 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 185 பேர் பலி!
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,628 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இங்கிலாந்தில் மேலும் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.