மாநில செய்திகள்

ஆகஸ்ட் 2: சென்னையில் இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம் + "||" + Today's petrol-diesel price situation in Chennai

ஆகஸ்ட் 2: சென்னையில் இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்

ஆகஸ்ட் 2: சென்னையில் இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 102.49 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.39 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணையித்து வருகின்றன.

கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. இதனால், இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100- ரூபாயைக் கடந்தும் தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வருகிறது. 

இந்தநிலையில் சென்னையில் 17வது நாளாக விலைமாற்றமின்றி ஒருலிட்டர் பெட்ரோல் ரூ.102.49க்கும், டீசல் ரூ.94.39க்கு விற்பனை செய்யப்படுகிறது.