தேசிய செய்திகள்

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 48 கோடியை கடந்தது + "||" + Corona vaccines administered in India so far has crossed 48 crore

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 48 கோடியை கடந்தது

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 48 கோடியை கடந்தது
இந்தியாவில் இன்று மாலை 7 மணி நிலவரப்படி, இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 48 கோடியை கடந்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘கோவேக்சின்’ மற்றும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்களின் கண்டுபிடிப்பான ‘கோவிஷீல்டு’ ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று (ஆகஸ்ட் 3) மாலை 7 மணி வரை, இந்தியா முழுவதும் இதுவரை 48,41,81,676 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 37,70,98,591 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 10,70,83,085 பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று ஒரே நாளில் 51,51,891 டோஸ் தடுப்பூசிகள் நாடு முழுவதும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களில் இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. நாட்டில் 5 மணி வரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது
நாடு முழுவதும் மாலை 5 மணி வரை 2 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,591 பேருக்கு கொரோனா
இந்தியாவில் தற்போது 3 லட்சத்து 84 ஆயிரத்து 921 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,973 பேருக்கு கொரோனா தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34 ஆயிரத்து 973 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது
4. இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தேர்வு
மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது.
5. இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 43,263 பேருக்கு தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43 ஆயிரத்து 263 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது